......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 17 June 2013

குடும்பக் கட்டுப்பாட்டினால் பிக்குமார்களின் தொகை குறைந்துள்ளது: கெஹெலிய

-மொஹொமட் ஆஸிக்
'சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நிலவுகின்ற குடும்ப கட்டுப்பாடுக் காரணமாக இலங்கையில் பிக்குமார்களின் தொகை குறைவடைந்துள்ளது. இலங்கையில், 20,000 – 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளனர்' என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி, கொனகலகல விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

'ஆரம்ப காலத்தில் சிங்கள பௌத்த குடும்பம் ஒன்றில் ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருந்தனர். ஆனாலும் இன்று அது இரண்டு குழந்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

'சிறிய குடும்பம் பொன்னானது' என்ற மந்திரத்தை கூறிக் கொண்டிருந்ததன் விளைவே இது.

பௌத்த சமயத்துக்காக ஒரு பிள்ளையை வழங்க சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு இன்று முடியாதுள்ளது.

கணக்கெடுப்புகளின்படி நாடு முழுதும்; இன்று 20,000 க்கும் 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளனர்.

நாட்டையும் பௌத்த மதத்தையும் அன்று முதல் பாதுகாத்தவர்கள் பௌத்த தேரர்களே. பௌத்த தேரர்களின் தொகை குறைவடைந்துள்ளது நாட்டுக்கு பாரிய நட்டமாகும்.
   
இன்று கேள்விப்படும் சம்பவங்கள் நாட்டின் நல்லொழுக்கம் பற்றி மீண்டும் சிந்திக்க வைத்துள்ளது' என்றார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/71137-2013-06-17-06-27-41.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE