......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 17 June 2013

பேஸ்புக்கிள் 19,000 பயன்பாட்டாளர்களின் விபரத்தை கோரிய அமெரிக்கா

பேஸ்புக் சமூக இணையதளத்திடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் 2012 கடைசி பகுதியில் மாத்திரம் சுமார் 19000 பயன்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை கேட்டுள்ளது.

அதேபோன்று மைக்ரோசொப்ட் நிறுவனத்திடம் சுமார் 32000 வாடிக்கையாளர்களின் விபரங்களை அமெரிக்கா கோரியுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் இணையதளத்தில் பாரிய கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக சி.ஐ.ஏ. உளவுப் பிரிவில் பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர் அண்மையில் தகவலை கசியவிட்டதையடுத்தே பேஸ்புக் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ள பேஸ்புக், கூகுள், யாகூ, அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் அனைத்தும் கண்காணிப்பின் நோக்கம் மற்றும் எண்ணிக்கை விபரங்களை பகிரங்கமாக வெளியிட அமெரிக்க அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளன.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/17/?fn=w1306172 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE