இணையதளம் உள்ளிட்ட வசதிகளை ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதித்து தொலை தூரப் பகுதிகளில் தர முடியாத நிலையில், அங்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பூமியின் வளி மண்டலத்தில் உள்ள “ஸ்ட்ராடோஸ்பியர்” அடுக்கில் சமிஞை கருவி பொருத்தப்பட்ட ராட்சத பலூன்களை பறக்கவிட்டு சோதனை நடத்தி வருகிறது கூகுள் நிறுவனம். சமிஞை கருவி மூலம் நியூஸிலாந்தின் லீஸ்டன் நகரில் உள்ள 50 வீடுகளுக்கு இணையதள இணைப்பு வழங்கப்பட்டு ள்ளது. இச் சோதனையில் வெற்றி கிடைத் தால், தொலைத் தொடர்பு வசதிகளை செய்து தர முடியாத பகுதிகளில் ஆயிரக்கணக்கில் சமிஞை கருவியுடன் கூடிய பலூன்களை பறக்கவிட்டு இணையதள இணைப்பை வழங்க முடியும் என்று கூகுள் நிறுவனம் கருதுகிறது.(மூலம்:http://www.thinakaran.lk/2013/06/17/?fn=w1306174 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.