......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 June 2013

பண்டைய கிராமத்தை பாதுகாக்கும் யுனஸ்கோ விண்ணப்பத்தை கைவிட்டது பலஸ்தீன்

ஜெரூசலத்திலுள்ள பட்டிர் கிராமத்தை உலக பாரம்பரிய சொத்தாக அங்கீகரிக்க விண்ணப்பிக்கும் திட்டத்தை பலஸ்தீன நிர்வாகம் கைவிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளி அழுத்தங்கள் காரணமாகவே பலஸ்தீன நிர்வாகம் இந்த முயற்சியை கைவிட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
யுனஸ்கோவின் உலக மரபுரிமை ஆண்டு கூட்டம் வியட்னாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. இதில் பட்டிர் கிராமம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ள உலக மரபுரிமை சொத்தாக அங்கீகரிக்கும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பலஸ்தீன நிர்வாகம் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி வந்தது. ஆனால் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்காமல் இருக்க பலஸ்தீன நிர்வாக ரகசியமான முறையில் தீர்மானித்திருப்பதாக அந்நாட்டின் ‘மாஆன்’ செய்திச் சேவை கூறியுள்ளது.
ஜேரூசலத்தின் தென் பகுதியில் அமைந்திருக்கும் பட்டிர் கிராமத்தின் ஒரு பகுதி இஸ்ரேல் எல்லைப் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தப் பகுதியை பிரிக்கும் மதிலை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக குடியிருப்பாளர்கள், சூழலியலாளர்கள் இஸ்ரேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இந்தத் திட்டம் ஒத்திப் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டிர் கிராமம் உலக பாரம்பரிய சொத்தாக அறிவிக்கப்படுவதன் மூலம் இஸ்ரேல் திட்டத்தை நிறுத்த அழுத்தம் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது.
பட்டிர் கிராமத்தினூடே பண்டைய ரோமானிய நீர்ப்பாசன வலையமைப்பு அமைந்துள்ளது. இந்த நீர்ப்பாசனத் திட்டத்தினூடே இன்றுவரை கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/18/?fn=w1306184 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE