......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 June 2013

ஜி-20 தூதுவர்களை உளவுபார்த்த பிரிட்டன்

பிரிட்டன் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற தூதுவர்களை உளவுபார்த்த தகவலை அமெரிக்க முன்னாள் உளவாளி எட்வட் ஸ்னோடன் கசியவிட்டுள்ளார். கடந்த 2009 லண்டனில் நடந்த ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற தூதுவர்களையே பிரிட்டன் கண்காணித்ததாக கார்டியன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கண்காணிக்கப்பட்ட அதிகாரிகளில் நேட்டோ கூட்டு நாடான துருக்கி மற்றும் தென்னாபிரிக்க தூதுவர்களும் அடங்குகின்றனர். கடந்த 2009 ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடந்த இரு மாநாடுகளிலும் பிரிட்டன் ரகசிய கண்காணிப்புக்காக விசேட திட்டத்தை முன்னெடுத்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிரிட்டன் அரச தொலைத் தொடர்பு தலைமையகமே இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கைக்காக பிரிட்டன் விசேடமாக தயாரித்த இணையதள முகாம்களை அமைத்து வெளிநாட்டு தூதுவர்கள் தமது கையடக்கத் தொலைபேசி ஊடான உரையாடல்கள், மின்னஞ்சல் தகவல்களை கண்காணித்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கசிந்துள்ள ஆவணத்தில் அப்போதைய ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மட்வடெவ் செய்மதி தொலைபேசி ஊடாக மொஸ்கோவுக்கு உரையாடுவதை ஒட்டுக்கேட்கவும் பிரிட்டன் முயற்சித்துள்ளது.
அமெரிக்காவின் இணையதளம் மற்றும் தொலைபேசி ஊடான உளவு வேலைகளை அம்பலப்படுத்திய ஸ்னோடன் தற்போது ஹொங்கொங்கில் தலைமறைவாகியுள்ளார்.



(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/18/?fn=w1306182 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE