முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா வளாகத்தில் முன்னர் தமது யூத கோயில் இருந்ததாக இஸ்ரேல் கூறி வருகிறது. “பலஸ்தீனர்களின் பிரச்சினைகளுக்கு ஜெரூசலம் ஒரு அடையாளம்” என்று கூறிய ஹம்தல்லாஹ், “பலஸ்தீன அரசுக்கு ஜெரூசலம் எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டவே இங்கு வந்தேன்” என்றார்.
கடந்த 1967ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின்போது கிழக்கு ஜெரூசலத்தை ஆக்கிரமித்த இஸ்ரேல் அதனை தமது நிலப் பகுதியாக அறிவித்தபோதும் சர்வதேச சமூகம் இன்றுவரை அதை ஏற்கவில்லை.
பலஸ்தீன பிரதமர் தனது விஜயத்தின்போது ஜெரூசலம் முப்தி மொஹமத் ஹுஸைனை சந்தித்ததோடு, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் அல் மகஸாத் மருத்துவமனையையும் பார்வையிட்டார்.
ஹம்தல்லாஹ் கடந்த ஜூன் 6ஆம் திகதி மேற்கு கரையின் ரமல்லாவில் வைத்து பலஸ்தீன பிரதமராக பதவியேற்றார்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/18/?fn=w1306185 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.