......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 June 2013

'விளையாட்டு துப்பாக்கி வினையானது'

பிளாஸ்டிக் துப்பாக்கியை களவெடுத்ததாக 10 வயது சிறுவன் ஏற்றுக்கொண்டதையடுத்து தண்டனையை தீர்மானிப்பதற்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு  நொச்சியாகம சுற்றுலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு விசாரணை நொச்சியாகம சுற்றுலா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

மற்றொருவரின் வீட்டை  பலவந்தமாக உடைத்து உள்நுழைந்து கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் குறித்த சிறுவனை ராஜாங்கனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அந்த வீட்டிலுள்ள பெண்ணொருவரே குறித்த சிறுவனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுவன் சார்பில் நீதிமன்றதில் நேற்று ஆஜரான சட்டத்தரணி குறித்த சிறுவன் விளையாட்டு துப்பாக்கியை எடுப்பதற்காகவே குறித்த வீட்டுக்குள் சென்றதனை நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொண்டுள்ளார் என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்தே தண்டனையை தீர்மானிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதவான் அதுவரையிலும் சிறுவனை சிறுவர் இல்லத்தில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முதல் தவனை விசாரணையின் போது, சிறுவன் நீதிமன்றத்திற்கு வருகைதந்திருக்கையில் சிறுவனின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அந்த சிறுவனுக்கு 1000 ரூபா பெறுமதியான விளையாட்டு பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த சம்பவத்தை இணக்க சபைக்கு கொண்டுச்சென்றிருக்கலாம் எனினும் இராஜங்கனை பொலிஸார் சம்பவத்தை பெரிதுபடுத்தி கடும்குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத்தாக்கல் செய்துள்ளது என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/69765-2013-06-05-14-28-17.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE