அம்பாறை பிரதேசத்தில் சட்டவிரோதமாக எருமை மாடுகளை அழைத்துச்சென்ற இருவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் ஒரு இலட்சத்து 3 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி
செல்வி எம்.எஸ்.பிரிங்கி நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அம்பாறை, இக்கல் ஓயா பிரதேசத்தில் இருந்து வரிபத்தான்சேனை பிரதேசத்திற்கு 43 எருமை மாடுகளை சட்டவிரோதமாக கால்நடையாக அழைத்துச்சென்றபோது தமண பொலிஸார் இருவரை கைதுசெய்ததுடன் மாடுகளையும் மீட்டனர்.
இதன்போது, வரிபத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 30 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக பொலிஸார் அம்பாறை, நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று புதன்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பில், அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றமை மற்றும் மிருகவதை ஆகிய இரு குற்றங்களுக்காக இருவருக்கும் ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் விதிக்கப்பட்டதுடன் தலா 51 ஆயிரத்து 500 ரூபா வீதம் ஒரு இலட்சத்து 3 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/69797-43-.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.