......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 26 June 2013

இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை மறுப்பு

இந்தியாவில் வெலிங்கடனில் பாதுகாப்பு சேவைகள் உத்தியோகத்தர் பயிற்சி நெறியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இலங்கையைச்சேந்த இரண்டு இராணுவ உத்தியோகத்தர்களை வேறு பயிற்சி நிறுவனத்திற்கு மாற்ற இந்தியா கேட்டபோதும் அந்த கோரிக்கையை அன்புடன் மறுத்துவிட்டதாக இலங்கை இன்று கூறியுள்ளது. தமிழ் நாட்டில் தமக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு காரணமாக இந்த இரண்டு அதிகாரிகளும் பயிற்சியை நிறைவு செய்யாமல் இலங்கைக்கு திரும்பினர்.
பாதுகாப்பு காரணமாக இந்த இரண்டு இலங்கை அதிகாரிகளையும் ஆந்திர பிரதேசத்திலுள்ள உயர் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றுக்கு மாற்றுவதற்கு இந்தியா கோரிக்கையொன்றை முன்வந்த போதும் அதனை இலங்கை மறுத்துள்ளது. இந்த இரண்டு அதிகாரிகளையும் இந்தியாவுக்கு பயிற்சிக்காக அனுப்பியிருந்த நோக்கத்தை புதிய பயிற்சி நிறைவேற்றாது என்பதனால் இந்தியாவின் முன்மொழிவை அன்புடன் மறுத்துவிட்டதாக இலங்கை இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசேகர தெரிவித்தார். இந்த இரண்டு அதிகாரிகளையும் மீளப்பெற்றமை இந்திய மற்றும் இலங்கை ஆயுதப்படைகளிடையேயான பயிற்சி ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் பாதகமாகாது என்றும் அவர் கூறினார்


(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72325-2013-06-25-12-47-27.html#sthash.USizFWM1.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE