......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 26 June 2013

இ.தொ.கா மௌனம் காப்பதேன்: யோகராஜன் எம்.பி

பெருந்தோட்டத்துறை சமுதாயத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் 13ஆவது திருத்தத்தை பற்றி கருத்துக் கூறாமல் இருப்பதையிட்டு ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மலையக அரசியல் கட்சிகளில் குறிப்பாக கடந்த காலங்களில் 13ஆவது திருத்தத்தை ஆதரித்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்றுள்ள பிரச்சினை தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் எஸ்.தொண்டமான் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்யுமளவிற்கு சென்றதை நினைவுகூர்ந்த அவர், தற்போது முக்கிய கட்டத்தில் அக்கட்சி மௌனம் சாதிக்கக்கூடாது என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஆர்.யோகராஜன் மேலும் தெரிவித்தார்.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72323-2013-06-25-12-26-31.html#sthash.yRyOp6Ef.dpuf)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE