......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 26 June 2013

13 குறித்து அரசாங்கம் இந்தியாவுடன் பேச வேண்டும்: ஐ.தே.க

-யொஹான் பெரேரா 
இரு நாடுகளுக்கிடையே செய்துக்கொள்ளப்பட்ட இருபக்க ஒப்பந்தம் காரணமாகவே 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே, 13 ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஒருபக்க தீர்மானத்தை எட்டமுடியாது.
13 ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் புதிய பேச்சுவார்த்தை ஒன்றுக்குப்போகவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. 13 ஆவது திருத்தத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு முக்கிய பங்கிருந்தது. அப்படியாயின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி ஏன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கமே தீர்மானமொன்றை எடுத்துள்ளமையினால் அதுதொடர்பிலான எமது கருத்து எடுபடாது. இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசியக்கட்சி கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமே கையெழுத்திட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஜாதிக ஹெல உறுமயவின் தனிநபர் பிரேரணையை புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வழிமொழிந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், கட்சியிலிருந்து அவர் நிறுத்திவைக்கப்பட்டள்ளதால் அவரது நடவடிக்கைகளுக்கு தாம் பொறுப்பல்ல என்றார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் எமது கட்சி அரசாங்கத்தை நம்பவில்லை என்றும் தெரிவித்த அவர் அரசாங்கத்துக்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்து ரணில் விக்ரமசிங்க எழுத்திய கடிதத்துக்கு ஜனாதிபதி இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72353-13-.html#sthash.ljYqB8oX.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE