இக்கருத்துக்களை நியப்படுத்தும் வகையில் ஆய்வுத்தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
வேலைத்தளங்களில் ஏற்படும் கசப்பான அனுபவங்களானது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் மன அழுத்தம் என்பது இன்று உலகளவில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தமது ஆய்வுத் தகவல்களில் தெரிவித்துள்ளனர்.
அலுவலகங்களில் தொழில்புரிபவர்கள், பாதுகாப்பு படையினர், சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முதல் அனைவருமே இத்தகைய மன அழுத்தங்களுக்கு உட்படுபவர்களாகவே உள்ளனர்.
இரவு பகல் பாராமல் தொழில்புரிபவர்கள் இவ்வாறான மன அழுத்தங்களுக்கு அதிகமாக உள்ளாகுவதாகவும் மேற்படி ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் ஆத்மதிருப்தியுடன் வேலை செய்பவர்களை நாம் இன்று அனேகமாக காண்கின்றோம். இவ்வாறானவர்கள் வீடுகளில் தமக்கான நேரத்தை செலவிடுவதைவிட தொழில் தளங்களிலேயே அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.
இதனால் குடும்பத்தினரின் முரண்பாடுகளையும் இத்தகையானோர் எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறு தொழில்புரிவர்களுக்கு தொழில்தளங்களில் எதிர்நோக்கும் சிறிய அல்லது பாரிய பிரச்சினை என்றாலும் அது அவர்களை மனதளவில் பாதிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.
போட்டி, பொறாமை மிகுந்த இன்றைய சூழலில் ஒருவரை வெட்டி வீழ்த்திவிட்டு உயர செல்ல வேண்டும் என்ற நிலைப்பாடே ஒவ்வொரு துறைகளிலும் காணப்படுகின்றது.
இது அவர்களை மிகவும் பாதிப்பதாக அமைவதுடன் அவர்களை மன அழுத்தத்திற்கும் தள்ளிவிடுகின்றது. இது நாளடைவில், மனநல பாதிப்பு, மாரடைப்பு என பலநோய்களுக்கு இயல்பாகவே அழைத்துசென்று விடுகின்றது.
அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து இடைவிடாது போரில் ஈடுபட்ட இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பிரிட்டன் இராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, 4000 இராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி தியானம் போன்றவற்றில் பயிற்சி கொடுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவில், கூட்டு நிறுவனங்களில் தொழில்புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் மன அழுத்தம் பெருமளவு அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவின் வெள்ளைச் சட்டை உழைப்பாளிகளில் 66 சதவீதம் பேர் தனிமையை உணர்கின்றனர். 77 சதவீதம் பேர் தமது மகிழ்ச்சியையும் வருத்தங்களை யாருடனாவது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். கடுமையான போட்டிச் சூழலின் காரணமாக தங்கள் விருப்பத்துக்கு மாறாக அதிகம் உழைப்பதாக 63 சதவீதம் பேர் கூறியுள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள மன நல அறக்கட்டளை ஆய்வு மையம் ஒன்று அலுவலகங்களில் தொழிலபுரிபவர்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தம் தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
இவ் ஆய்வறிக்கையில்,
தாம் புரியும் தொழிலானது அவர்களது வாழ்க்கையில் மிகவும் இறுக்கமான ஒரு நிலையை தமக்கு தோற்றுவிப்பதாக மூன்றில் ஒரு பங்கினர் தெரவித்துள்ளனர்.
இதேவேளை, பணியிடங்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக 7 வீதமானவர்கள் தற்கொலைக்கு முற்படுவதாகவும் அவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 18-24 வயதுகிடைப்பட்டவர்களிடையே அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அலுவலகங்களில் ஏற்படும் மனக்கசப்பான சம்பவங்கள் காரணமாக 11 வீதமானவர்கள் தமது தொழிலை இராஜினாமா செய்துவிடுகின்றனர். இவர்கள் தமது பதவியிலிருந்து வெளியேறுவதை பற்றி தீர்மானிக்கின்றனர்.
இதேவேளை, தமது அலுவலக தலைமை அதிகாரிகளிடம் தமது பிரச்சினை தொடர்பில் பேசுபவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்களில் தொழில்புரிபவர்களுக்கு மனநலம் சார்ந்த செயற்திட்டங்கள் தேவை என மேற்படி அமைப்பின் தலைமை அதிகாரி போல் பாமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆறில் ஒரு வீதமானவர்கள் மனதளர்ச்சிக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். பெரும்பாலான மேலதிகாரிகள் இவ்வாறானவர்களுக்கு ஆதரவு அல்லது ஊக்குவிப்பு வழங்குவதில்லை என நாம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொழில் என்பது மிகப்பெரிய மன அழுத்தத்திற்கான காரணி என 34 வீதமானவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பிரச்சினைகளுக்கு தூக்க மாத்திரை, அல்லது மன அழுத்தங்களை குறைக்கும் மருந்து, அல்லது புகைபிடித்தல் போன்றவற்றை கடைப்பிடித்து வருவதாகவும் இவை அவர்களுக்கு பிரத்தியேகமான வேறு நோய்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம் என்பது உயிராபத்தை விளைவிக்கும் காரணியாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன அழுத்த அதிகாரிப்பானது இதய நோயாளிகளுக்கு மரணத்தை விளைவிக்கும் காரணியாக அமைந்துள்ளமை பற்றி பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன என கலாநிதி லானா வடிகின்ஸ் தெரிவித்துள்ளார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-18-09-50-11/61123-2013-03-20-12-30-58.html )
எனது தொழில் இயந்திரங்கள் சம்பந்தப்பட்டது Nanotechnology. நான் ஜப்பானில் இயந்திர பொறியிலராக பத்து வருடங்களாக பணியாற்றி வருகிறேன். அதிக சம்பளம், கௌடுப்பணவுகண் போன்ற வற்றை பெற்று வருகிறேன். எனது அதிக நேரம் இந்த தொழிலில் தான் கடந்து செல்கிறது.
ReplyDeleteஜப்பானியர்கள்ை விடவும் நல்ல திறமை, தகுதி இருந்தும் என்னால் உயர் பதவிக்கு செல்ல முடியாது. ஏனென்றால் ஜப்பானியர்கள் ஒரு பொழுதும் வெளிநாட்டவர்கள் உயர்வு பெறுவதை அனேகமாக விரும்புவதில்லை. இதன் காரணமாக நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன். என்னால் இந்த தொழிலை தொடர முடியாத நிலைமைிள் உள்ளேன். இதற்கு என்ன செய்வது என தினமும் சிந்தித்த வண்ணம் உள்ளேன்.
வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்துவிட்டால் சில அம்சங்களை விட்டுக்கொடுக்க அல்லது எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகத்தான் வேண்டும். அது வெளிநாட்டு வாழ்க்கையில் நடந்தேறுகின்ற சாதாரண விடயமாக இணைந்துவிட்டது.
Deleteஉதாரணமாக, நம்ம நாட்டுக்கு ஒருவர் வெளிநாட்டிலிருந்து தொழில்வாய்ப்புக்காக வந்து குடியேறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அவரின் நிலையினை பாருங்கள், உங்களுக்கு முன்னால் (உள்நாட்டவருக்கு)அவருக்கு சலுகைகள் மற்றும் உள்ளூர் வாசிகளை விட பெரிய அந்தஸ்து கொடுத்தால் உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்...
இது சாதாரணமாக எல்லோருடைய மனதிலிருக்கும் ஒரு எண்ணமேயாகும். உள்ளூர் காரனைவிட வெளியூர்காரனை குறைத்துப் பார்ப்பது. ஏன் ஒரு கட்சிக்காரனை விட மற்ற கட்சிக் காரனை முந்தி செல்வதனை பொறமை கொள்வதென்று மனித வாழ்வில் இது சாதாரணவிடயம்.
ஆக நீங்கள் உங்கள் மனதில் பதித்துவைத்துக் கொள்ளுங்கள், நாம் வெளிநாட்டவர்கள் என்று. (உள் நாட்டவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும் என்று ( மற்றும் நமக்கு தங்குவதற்கு, வேலை செய்வதற்கு வாய்ப்பு தனத்துக்கு நன்றி உணர்வோடு இருத்தல் வேண்டும் என்று )உங்கள் விரக்தி மனப்பான்மை உங்ககளை விட்டு அகன்றுவிடுவதனைக் காண்பீர்கள்.
மற்றது, நமது நோக்கம் நாடு தாண்டிப் போனது, சம்பாதிப்பதற்கு...நல்ல சம்பாத்தியம் கிட்டியது என்றால் நம்முடைய வாழ்வில் சந்தோசம் தான் !! இலக்கு நிறைவேறுகின்றதல்லவா ?? பணமிருந்தால் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொள்ளலாம் நண்பா ...!
உங்கள் மனதில் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளுங்கள், நாம் உழைப்பதற்கு வந்தவர்கள் என்று....!! உங்கள் மனதில் மாற்றம் தோன்றும்.
((எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை நண்பா ...தேற்றிக் கொள்ளுங்கள், கிடைப்பதனைக்கொண்டு திருப்தியும் அடைந்து கொள்ளுங்கள் ))