......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 12 June 2013

அமெரிக்க உளவு இரகசியத்தை வெளியிட்டவர் திடீர் மாயம்

அமெரிக்காவில் தொலைபேசிகள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக ஒட்டுக் கேட்கப்பட்டமை குறித்து பெரும் ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் சி.ஐ.ஏ. உளவுத்துறை ஊழியர் தான் தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டு ஹொட்டலில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார்.

29 வயதான எட்வேர்ட் ஸ்நோவ்டன் திங்களன்று தனது ஹொட்டலில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர் அவரைக் காணவில்லை. ஆனாலும் அவர் இன்னமும் ஹொங்கொங்கிலேயே இருப்பதாக நம்பப்படுகின்றது.
அடக்கு முறையில் இருந்து மக்களைக் விடுவிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக முன்னதாக அவர் கூறியிருந்தார்.
பல லட்சக்கணக்கான தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை மேற்கொண்டமை மற்றும் இணைய தளங்களை கண்காணித்தமை ஆகிய நடவடிக்கைகளை அமெரிக்க உளவு நிறுவனங்கள் மேற்கொண்டதாக கடந்த வாரம் தகவல் வெளியாகியிருந்தது.
ஒரு குற்றவியல் விடயமாக கையாளப்படும் இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய உளவு சேவையின் இயக்குநர் அலுவலகம் அறிவித்திருந்தது.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதிக்கு வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் பதியப்பட்டிருந்த ஒரு மனுவில் ஸ்நோவ்டனுக்கு உடனடியாக மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று முப்பதினாயிரம் பேர் கையெழுத்திட்டுக் கோரியிருந்தனர்.
எப்படியிருந்த போதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்காக அரசாங்கம் தொலைபேசி பதிவுகளைச் செய்தல் ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று வொஷிங்டன் போஸ்ட் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்று கூறியிருந்தது.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/12/?fn=w1306122 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE