60 க்கும் மேற்பட்டோர் பலி
ஹட்லா கிராமத்தில் இடம்பெற்ற மோதலில் குடியிருப்பாளர்கள் அரச ஆதரவு போராளிகள் என குறைந்தது 60 பேர் பலியாகி இருப்பதாக பிரிட்டனை மையமாகக் கொண்டு செயற்படும் சிரியா தொடர்பில் கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
ஈராக் எல்லையில் இருக்கும் எண்ணெய் வளம் கொண்ட ஹட்லா பகுதி மீதான தாக்குதல் குறித்த வீடீயோ யூடியுப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதில் முகமூடி அணிந்த போராளிகள், “மறுப்பாளர்களான ஷியாக்களின் வீடுகளுக்கு முஹாஜிதீன்கள் (இஸ்லாமிய போராளிகள்) நுழைந்துவிட்டார்கள்” என கோஷமிடுவது பதியப்பட்டுள்ளது. அதேபோன்று கிளர்ச்சியாளர்கள் ஷியா முஸ்லிம்களின் வீடுகளை தீக்கிரையாக் குவதும் வீடியோவில் காண்பிக்கப்படுகிறது.
இது பொதுமக்கள் மீதான படுகொலை என சிரிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சிரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் மோதலில் இதுவரை 80,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதை ஐ. நா. தரவு குறிப்பிடுகிறது. அங்கு அன்றாடம் இரு தரப்பும் துஷ்பிரயோகம், வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. குற்றம்சாட்டுகிறது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/13/?fn=w1306133 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.