......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 June 2013

உலகின் வயதானவர் 116 வயதில் மரணம்

உலகின் மிக வயதானவரும் வரலாற்றில் பதிவான வயதான ஆணுமான ஜப்பானின் ஜிரொமொன் கிமுரா தனது 116 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார்.
கிமுரா, கியோட்டோவிலுள்ள மருத்துவமனையில் மரணமடைந்ததாக அந்நாட்டு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் பதிவான மிக வயதான ஆண் நபர் என கடந்த டிசம்பரில் கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். அத்துடன் உலகின் வயதானவராகவும் பதிவானார்.
1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார்.
தனது 115வது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய வெளிச்சத்தின் கீழ் நின்றிருப்பதுதான் காரணம் என்று அவர் கூறியிருந்தார்.
அவருக்கு 7 பிள்ளைகள், 14 பேரக் குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன் பேத்திகள், 15 எள்ளுப்பேரன் பேத்திகள் உள்ளனர்.
கிமுராவின் மரணத்தை அடுத்து உலகின் வயதானவர் என்ற சாதனை மற்றொரு ஜப்பான் நாட்டவரான மிசவ் ஒகாவாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 5 ஆம் திகதி தனது 115 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர் ஏற்கனவே உலகில் வாழும் வயதான பெண் என்ற சாதனையுடன் இருந்தார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நூறு வயதை கடந்த சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/13/?fn=w1306131 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE