......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 June 2013

வத்திக்கானில் தன்னினச் சேர்க்கை ஆதரவுக் குழு

பாப்பரசர் தகவல்
வத்திக்கானுக்குள் தன்னினச் சேர்க்கை ஆதரவுக் குழு ஒன்று செயற்படுவதாக பாப்பரசர் பிரான்ஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று ஊழலும் அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கத்தோலிக்க ஊடக செய்தியை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை கூறியுள்ளது.
லத்தீன் அமெரிக்க கத்தோலிக்க தலைவர்ளுடனான தனிப்பட்ட சந்திப்பின்போது பாப்பரசர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் போது வத்திக்கான் முகம் கொடுத்திருக்கும் பிரச்சினைகள் குறித்து பாப்பரசர் வெளிப்படையாக கருத்து வெளியிட்டதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளார்.
இதில் வத்திக்கான் நிர்வாகத்தில் புனிதமா னவர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பாப்பரசர் அங்கு ஊழல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பெப்ரவரியில் 16 ஆவது ஆசிர்வாதப்பர் பதவி விலகியதன் பின்னர் வத்திக்கானில் இருக்கும் தன்னினச் சேர்க்கை ஆதரவு குழுவினர் ஒன்றிணைந்து தமது குறிக்கோளை நிறைவேற்ற முயற்சிப்பதாக இத்தாலிய ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த சூழலே 16 ஆவது ஆசிர்வாதப்பர் பதவி விலகக் காரணமாக இருந்தது எனவும் உறுதிப்படுத்தப்படாத அந்த செய்தி கூறியிருந்தது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/13/?fn=w1306135 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE