பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் பிரதிகளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிடம் கையளித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த, ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த நகல்களை வழங்கினார்.
ஐ.தே.க.வால் தயாரிக்கப்பட்டிருக்கும் உத்தேச அரசியல் அமைப்பு நகலை நன்கு ஆராய்ந்து தமது அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம்.சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்த ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமது கட்சியால் தயாரிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பின் நகல் பிரதிகள் கையளிக்கப்பட்டது. (ள - து)(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/29/?fn=n13062914 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.