சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மேலும் எட்டாயிரம் இலங்கை பணியாளர்களை இலங்கைக்கு துரிதமாக தருவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.
இதுவரை சவூதி அரேபியாவில் இருந்த சுமார் 2200 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய கூறினார்.
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வதற்காக சவூதி அரசாங்கம் பொது மன்னிப்புக் காலமொன்றை அறிவித்திருந்தது. பொது மன்னிப்புக்காலம் ஜுலை 3 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகக் கூறிய அவர் அதனை நீடிப்பது குறித்து சவூதி அதிகாரிகளுடன் பேச உள்ளதாகவும் கூறினார்.
அதுவரை இலங்கை பணியாளர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுகள் வழங்கப் பட்டுள்ளன.
இலங்கைப் பணியாளர்களுக்கு நாடு திரும்புவதற்காக விஸா பெற தேவை யான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளதாகவும் அதுவரை அவர்கள் தாம் தங்கியுள்ள இடங்களிலே தங்கியிருக்குமாறு அறிவித்துள்ளதாகவும் ஜானக தெரிவித்தார்.
சில பணியாட்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் உணவு, தங்குமிட வசதி இன்றி கஷ்டப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ள - து)(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/29/?fn=n1306295 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.