......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

வடக்கு தேர்தலில் ஜனாதிபதியே வெல்வார்: சித்தார்த்தன்

-சுமித்தி தங்கராசா

'தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியை உருவாக்காவிட்டால் வடமாகாண சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி கொள்வார். அதில் எவ்வித ஜயமுமில்லை' என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'மாகாண சபை தேர்தலில்  அரசியல் பலம் மிக்க மூத்தவர் ஒருவரை நிறுத்தி தேர்தலில் பலத்தினை பெறவேண்டும். அதேவேளை, வடமாகாண சபை தேர்தலில் ஒற்றுமையுடன் செயற்படுவோம்' என்றும் அவர் கூறினார்.

'அதேவேளை, உள்ளூராட்சி சபைகளுக்குள் அதிகாரங்களை சரியாக செய்ய முடியாமல் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்கு கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே பிரச்சினைகள் நடைபெறுகின்றன.

உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் நான் இந்த கட்சி, நீ அந்த கட்சி என பிரச்சினை படுவதினாலேயே உள்ளூராட்சி அதிகாரங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ளது' என்றும் அவர் கூறினார்.

அத்துடன், வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றால், மாகாண சபை அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் செயற்படுத்த முடியும்' என்றும் அவர் மேலும் கூறினார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/71527-2013-06-19-13-54-08.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE