......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

13ஐ திருத்தாமல் வடக்கில் தேர்தல் நடந்தால் வீதியில் இறங்குவோம்: விமல்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை மறுசீரமைத்த பின்பே செப்டெம்பர் மாதத்தில் வடக்கில் தேர்தல் நடத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. அதனை மீறியும் அரசாங்கம் செயற்படும் பட்சத்தில் நாட்டில் பல எதிர்ப்பு அலைகள் தோன்றும். மக்களை இதற்காக வீதியில் இறக்குவோம்' என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளார் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தியா சென்று இந்திரா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தாலும் இந்தியாவின் லோக்சபாவின் கீழான  நிர்வாகத்தில் இலங்கை அரசாங்கமும் ஐனாதிபதியும் இல்லை. 

அப்படி அவர்கள் நினைத்தால் தற்போதைய ஐனாதிபதி அதற்காக அடிபணியப் போவதுமில்லை. யுத்தம் நடைபெறும்போது எவ்வளவோ அச்சுறுத்தல்கள் வந்தபோதும் ஐனாதிபதி அவற்றைக் கணக்கில் எடுக்காமல் யுத்தத்தை வெற்றியீட்டினார். அதே போன்று இந்தியா இவ்விடயத்தில் கையடித்தால் அதனை அவர் கணக்கெடுக்கப் போவதில்லை' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

'இந்த நாட்டின் பயங்கரவாதத்தை உருவாக்கியது இந்தியாவே. இந்தியாவின் 'ரோ' அமைப்புடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளித்து அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள். அதே விடுதலைப் புலிகளே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தனர்.

இலங்கையில் 30 வருட கொடூர பயங்கரவாதத்தை உருவாக்கியவர்களும் இந்தியர்களே. அந்த கொடிய பயங்கரவாத்தை வெற்றிகொண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகளின் ஒர் எஜென்சியாகவே நாங்கள் அவர்களை பார்க்கின்றோம்' என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர், '13ஆவது சீர்திருத்தமானது நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவே அதுவும் வட மாகாணசபைத் தேர்தலின் பின்னரே மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார். இதில் உங்களது நிலைப்பாடு என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் வீரவன்ச, 'வடக்கு தேர்தலுக்கு முன் பொலிஸ், காணி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. மேல் மாகாணத்தில்கூட முதலமைச்சரின் அனுமதிபெற்ற பின்பே மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவதற்கான அதிகாரம் மாகாணசபைச் சட்டத்தில் உள்ளது. அதேபோன்று வடக்கில் தமிழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டால் அவர் வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றும்படி உத்தரவிடுவார்' என்றார். 

இதேவேளை, '13ஆவது திருத்தத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களில் அரசு திருத்தம் கொண்டுவந்தால் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு நடந்தால் கிழக்கு மாகாண சபையிலும் விரிசல் ஏற்படுமே?' என்று மற்றுமொரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். 

அந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'முஸ்லீம் காங்கிரஸ் கட்சி அரசின் எந்த விடயத்திலும் ஆதரவு அளித்த கட்சி அல்ல. கிழக்கில் தனித்து கேட்டார்கள். அங்கு மஹிந்தவின் ஆட்சியில்தான் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன என தெரிவிப்பார்கள். அரசுக்குள் வந்தபின் அவ்வாறு பள்ளிகள் உடைக்கப்படவில்லை எனத் தெரிவிப்பார்கள். 

மறைந்த அமைச்சர் முஸ்லீம் காங்கிரஸை ஆரம்பித்ததே வட கிழக்கு  இணைந்தபோது தான். அவர் கிழக்குடன் தெற்கு மக்கள் இணைந்து செயலாற்றவே அரசியலமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். தற்பொழுது உள்ள தலைமைத்துவம் இலங்கையில் உள்ள  தூதுவராலயங்;கள் நிகழ்ச்சி நிரல்களுக்கு செயல்படுகின்றார்' எனத் தெரிவித்தார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/71523-13-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE