......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

-சுமித்தி தங்கராசா

இந்திய மீனவர்கள் 25பேரையும் நாளை  வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஊர்காவற்துறை நீதிமன்றில் இ;ந்திய மீனவர்கள் 25பேரையும் ஆஜர்ப்படுத்திய வேளையில், ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.மகேந்திரராஜர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினமே யாழ்.மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

உத்தரவின் பிரகாரம் 25 இந்திய மீனவர்களையும் இன்று யாழ். மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். ஆஜர்ப்படுத்திய வேளை, அரசசட்டத்தரணி மன்றிற்கு சமூகமளிக்காத காரணத்தினால், 25 மீனவர்களையும் நாளை (20.06.2013) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், நாளை மீண்டும் யாழ். மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் உத்தரவிட்டார்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/71521-2013-06-19-13-24-08.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE