......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 June 2013

தமிழக மீனவர் விவகாரம்: ஜெயா மீண்டும் கடிதம்

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அவ்வப்போது சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். புpரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கடல் பகுதிதயில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சிறை வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இது பற்றி தொடர்ந்து உங்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்து வருகிறேன்.  எனினும், மத்திய அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சம்பவத்தில், இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. மத்திய அரசின் மௌனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு, இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஜூன் 5 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 49 மீனவர்களை இலங்கை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது. மேலும், கடந்த 15 ஆம் திகதி 8 தமிழக மீனவர்களை கைது செய்து 12 நாள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் செயலில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. அவர்களை பாதுகாத்து, தமிழகத்தின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் மீன்பிடிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது இலங்கை சிறையில் வாடும் 57 இலங்கை மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71215-2013-06-17-11-32-25.html#sthash.pFuHsQzQ.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE