......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 23 June 2013

தெற்காசிய நாடுகளை சீர்குலைக்க கூடியதாக காலநிலை மாற்றமடைகிறது

காலநிலை செயற்பாட்டு வலையமைப்பின் (Climate Action Network)  பணிப்பாளர் சஞ்சே வாஷித் காலைநிலை வலையமைப்பின் மாற்றம் சமீபத்திய ஆண்டுகளில் தெற்காசிய நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல் சமீபத்திய உலக வங்கியின் அறிக்கையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் தொடர் பாக தெற்காசிய நாடுகளுக்கு குறைந்தளவிலான காபன் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதைத் தவிர்ப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம் என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாரர்.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை யில் மிகவும் கஷ்டப்பட்டு தெற்காசியாவில் வறுமையை குறைப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் இந்தக் காலநிலை மாற்றத்தினால் சீர்குலைந்து விடுமென்றும், மாறிவரும் காலநிலை காரணமாக போதியளவு தண்ணீரையும், உணவு வளங்களையும் பெறுவதில் கஷ்டப்படு வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதிக உஷ்ண நிலை அழிவை ஏற்படுத்தும் வெள்ளப் பெருக்குகள், வரட்சி இவற்றுடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடு களில் ஏற்பட்டுவரும் சூறாவளி காற்றும் காலநிலையினால் ஏற்பட்டுள்ள பேராபத்தாக உருவாகி வருகின்றது என்றும் இவ்வறிக்கை யில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் வடபகுதி மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட பெருமழையும் மனித அழிவும் இதனால்தான் ஏற்பட்டது என்றும் அவ்வறிக்கை வலியுறுத்துகிறது. 2005ஆம் ஆண்டில் மும்பாயில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் 500 பேர் கொல்லப் பட்டனர். அத்துடன், சொத்துக்களுக்கும் கட்டடங்களுக் கும் ஏற்பட்ட அழிவு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தில் சீரற்ற கால நிலையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, சூறாவளி காற்றினால் வருடாவருடம் பேரழிவை பங்களாதேஷ் எதிர்நோக்குகின்றது. அங்கு இயற்கை அனர்த்தங்களினால் ஒவ்வொரு வருடமும் சுமார் 25,000 பேர் மரணிக்கிறாரர்கள் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகின்றது. இதேநிலை இலங்கையிலும் நிலவி வருகிறது. கடல் கொந்தளிப்பு, அளவுக்கு அதிகமான உஷ்ணம், கடலரிப்பு போன்றவையும் இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
மாலைதீவுக் குடியரசும் காலநிலை மாற்றத்தினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக் கான மனிதர்கள் குடியிருக்காத தீவுகள் வருடாவருடம் சிறிது சிறிதாக கடலில் மூழ்கி வருகின்றன. இந்தப் போக்கில் கடல் பெருக்கெடுக்க ஆரம்பித்தால் இன்னும் நூறு ஆண்டுகளில் மாலைதீவு குடியரசு என்ற நாடே உலக நாடுகளின் வரைபடத்திலிருந்து நீங்கிவிடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இது போன்றே பாகிஸ்தானும் வரட்சி, பெரு மழை போன்ற இயற்கை அனர்த்தங்களால் வருடாவருடம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளும் இத்தகைய காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
தெற்காசிய நாடுகள் மரங்களை வெட்டி வீழ்த்துதல் போன்ற இயற்கையான சூழலுக்கு தீங்கிளைக்கக் கூடிய செயற்பாடுகளை கைவிட்டால் மாத்திரமே இந்நாடுகள் அடுத்துவரும் வருடங்களில் இயற்கை அழிவுகளை குறைவாக எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று காலநிலை அவதானிகள் அறிவுறுத்து கிறார்கள். (ள-து)


(மூலம்: http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/06/23/?fn=n13062310 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE