......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 23 June 2013

ஜெருசலேமில் இஸ்ரேலியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பரபரப்பு!

ஜெருசலேமில் அமைந்துள்ள யூதர்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றான மேற்குச் சுவர் பகுதியில் வைத்து இஸ்ரேலியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் " அல்லாவு அக்பர்" எனக் கத்தியதாகவும் இதனால் குறித்த நபர் பலஸ்தீன போராளியாக இருக்கலாம் என்று சந்தேகித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு நேரப்படி காலை 8 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றதாகவும் இதன்போது பலர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டையடுத்து குறித்த பகுதி 1 மணித்தியாலத்துக்கு மூடப்பட்டுள்ளது.
இதேவேளை சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=741 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE