......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 28 May 2013

பொலிஸாரின் சட்டம் பிழை: சந்தேகநபர் விடுதலை

காணி மீட்டல் மற்றும் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கடமையை செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இல்லையென நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து சந்தேநபர் ஒருவர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனி வீதியைச்சேர்ந்த மொஹமட் பைசார் என்பவரையே கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே நேற்று இவ்வாறு விடுதலைச்செய்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக தற்காலிக கூடாரத்தை அமைத்திருந்ததாக அவருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததுடன் அந்த கூடாரத்தையும் அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் பொலிஸார் முழுமையாக சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதவான், இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு பொலிஸாருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

அதற்கான அதிகாரம் காணி மீட்டல் மற்றும் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டி நீதவான் சந்தேகநபரை விடுதலை செய்தார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/68632-2013-05-27-17-11-44.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE