காத்தான்குடி கடலில் குதித்த பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு கடலில் குதித்துள்ளார்.
இவர் கடலில் குதிப்பதை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவரை உயிருடன் மீட்டு காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இப்பெண், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/68682-2013-05-28-07-41-59.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.