அட்டாளைச்சேனை பாலமுனை கடலுக்கு குளிக்க சென்று கடலில் மூழ்கிய நான்கு மாணவர்களையும் கடற்படையினர் மீட்டெடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, நிற்கவூர் அல்அஸ்ரக் தேசிய பாடசாலையில் 8 ம் தரத்தில் கல்வி கற்கும் எஸ்.ஜே.எம். நஸாத், பாலமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம். சினாஸ், எம்.எஸ்.எம். பெளவாஸ் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த எஸ்.மபாஸ் ஆகிய நான்கு மாணவர்களும் பாலமுனை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நஸாத், சினாஸ் ஆகிய இருவரும் கடலலையில் சிக்குண்டு இழுத்து செல்லப்பட்ட போது அடுத்த இரு மாணவர்களும் கூக்குரலிட்டனர். அருகில் நின்றவர்கள் கடற்படையினருக்கு அறிவித்ததையடுத்து கடற்படையினர் இருவரையும் மீட்டு பின்னர் நான்கு மாணவர்களையும் பொலிஸில் ஒப்படைத்ததையடுத்து நான்கு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=4810 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.