டெல்லியில் உடன் படிக்கும் மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி பாவனா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களே திடுக்கிடும் செயலைச் செய்துள்ளனர்.
குறித்த பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் 4 மாணவர்கள் 16 வயதாகும் சக மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்
கடந்த 13ஆம் தேதி அந்த 4 பேரில் ஒருவரின் வீட்டுக்கு அந்த மாணவி சென்றுள்ளார்.
அங்கு வைத்து ஒரு மாணவர் அந்த மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளான்.
அதை மற்றவர்கள் தடுக்காமல் இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அவர்கள் இது குறித்து பொலிஸில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் 4 மாணவர்களையும் கைது செய்தனர்.
இதன்போது கைதான அனைவரும் 16 முதல் 17 வயதானவர்கள் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸா அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு மாணவர் அந்த மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியபோது மற்ற 3 பேரும் அங்கிருந்துள்ளனர். ஆனால் குற்றம் நடந்த இடத்தில் இருந்ததால் அந்த 3 பேர் மீதும், வல்லுறவுக்குட்படுத்தியவர் மீது பதியப்பட்டுள்ள அதே பிரிவுகளில் தான் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றார்.
அந்த மாணவர்களும், மாணவியும் ஒரே பகுதியில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=569 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.