......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

தி.மு.க. வெளியேற்றம்: தமிழகத்தில் கொண்டாட்டம்!

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதை அக்கட்சியினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் திமுக விலகுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை அறிவித்தார்.
இதையடுத்து தங்கள் கட்சி எம்.பி.க்கள் இன்று அல்லது நாளை தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலமாக இருந்த திமுக வெளியேறியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆனால் இந்த செய்தி அறிந்த திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டனர்.

அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திமுக மத்திய அரசில் இருந்து வெளியேறியதை உற்சாகமாக கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=568 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE