......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

கனடாவில் கைதிகள் ஹெலி மூலம் தப்பிக்க முயற்சி

கனடா சிறைச்சாலையிலிருந்து இரு கைதிகள் கடத்தப்பட்ட ஹெலிகொப்டர் மூலம் ஹொலிவுட் திரைப்பட பாணியில் தப்பிச் சென்றுள்ளனர்.

கியூபெக் செயன்ட் ஜரம் சிறைச்சாலை யிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டரில் கயிறு கட்டி அதில் தொங்கியவாறு தப்பிச் சென்று ள்ளனர். எனினும் இந்தக் கைதிகள் ஒரு சில மணி நேரத்திலேயே பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இதன்போது சுற்றுலா நிறுவனத்தின் ஹெலிகொப்டர் ஒன்றை கடத்திச் சென்று சிறைச்சாலை வளாகத்துக்கு மேலால் பறக்கவிட்டு அங்கிருந்து கயிறு மூலம் இரு கைதிகளும் தப்பிக்கச் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 36 வயதான பென்ஜமின் ஹட்சன் மற்றும் 33 வயதான டென்னி பிரொவன்கல் ஆகிய இரு கைதிகளுமே இவ்வாறு தப்பிக்க முயன்றுள்ளனர். இந்த முயற்சியின்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிறைச்சாலைக்கு 60 கிலோ மீற்றருக்கு அப்பால் வைத்தே கைது செய்யப்பட் டுள்ளனர்.
இருவரையும் தப்பிச் செல்ல உதவிய ஹெலிகொப்டரும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளதோடு அதனை செலுத்தியவரும் விசாரணைக்காக கைது செய்யப்பட் டுள்ளார். 480 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செயின்ட் ஜரம் சிறைச்சாலையில் கடந்த மாதம் சிறு கலவரம் ஒன்று பதிவானது குறிப்பிடத்தக்கது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/19/?fn=w1303192 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE