இதற்கு முன்னர் கடந்த ஜூலையிலும் ஆயுத உடன்படிக்கைக்கான பேச்சு வார்த்தை இடம்பெற்றபோதும் அது தோல்வியிலேயே முடிந்தது. உலகின் மிகப் பெரிய ஆயுத விற்பனை நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்தே அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஐ.நா. தலைமையகத்தில் நேற்று ஆரம்பமான மேற்படி பேச்சுவார்த்தை இரண்டு வாரங்கள் அளவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை பேச்சுவார்த்தையின் போது தமது நாடு உடன்பாடொன்றை எட்ட முயற்சிப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். கடந்த முறை பேச்சுவார்த்தையில் உடன்பாட்டை எட்ட போதிய அவகாசம் தேவை என அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. இதனையே ரஷ்யாவும் சீனாவும் வழி மொழிந்தன.
இது தொடர்பில் ஜோன் கெர்ரி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆயுத விற்பனை தொடர்பான உடன்படிக்கையை எட்டுவதற்கு அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படும். இந்த உடன்படிக்கை சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவும் என குறிப்பிட்டுள்ளது. ஐ.நா. சர்வதேச இணக்கப்பாட்டை பெற முயற்சிக்கும் ஆயுத உடன்படிக் கையில் எந்த நாட்டினதும், உள்நாட்டு ஆயுதப் பயன்பாட்டை கட்டுப்படுத்த திட்டமிடப்படவில்லை.
ஆனால், அனைத்து நாடுகளும் ஆயுதப் பரிமாற்றம் மற்றும் ஆயுத முகவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையை வகுக்க அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/19/?fn=w1303191 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.