......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்குக்கரை கைதி காசாவுக்கு அனுப்பி வைப்பு

10 ஆண்டுகளுக்கு காசாவில் வாழ நிபந்தனை
உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிக்கு காசாவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப் பட்டது.

மேற்குக் கரையின் ஹெப்டுனைச் சேர்ந்த 37 வயதான அய்மன் ஷரவ்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் சிறையில் இருந்து காசா பகுதியை சென்றடைந்தார். எனினும் அவர் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு காசாவில் வாழ்வதற்கு உடன்பட்டதைத் தொடர்ந்தே விடுவிக்கப்பட்டுள்ளார். ஷரவ்னா அம்பியுலன்ஸ் வண்டியில் எரஸ் எல்லை வாயிலை தாண்டி காசாவை வந்தடைந்தார். அவரை பலரும் ஹமாஸ் கொடியை ஏந்தியவாரு வரவேற்றனர். ஷரவ்னா அம்புயுலன்ஸ் வண்டியூடே நேரடியாக காசா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
ஷரவ்னா கடந்த ஜுலை மாதம் தொடக்கம் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவர் இஸ்ரேல் இராணுவ நீதிமன்றத்தால் பல தசாப்தங்களுக்கு சிறைத் தண்டனை வழங்க வாய்ப்பு இருந்தது. எனினும் இஸ்ரேலின் நிபந்தனைக்கு இணங்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர், ஜவாத் ப்ளவுஸ் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் ஷரவ்னா 2002 ஆம் ஆண்டு 38 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உள்ளானார். எனினும் 2011 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஹமாஸ¤க்கு இடையில் ஏற்பட்ட கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் விடுவிக்கப்பட்ட அவர் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 7 மாதமாக உணவு உட்கொள்ள மறுத்துவந்தார்.
எனினும் தற்போது விடுதலையாகியுள்ள ஷரவ்னா, மேற்குக் கரையிலிருக்கும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குக் கரை பலஸ்தீனர்கள் காசாவுக்கு செல்ல இஸ்ரேல் இராணுவம் கடும் கெடுபிடிகளை மேற்கொள்கிறது.
மேற்குக் கரை இஸ்ரேலின் கிழக்கு பகுதியில் இருப்பதோடு ஹமாஸின் ஆளுகைக்கு உட்பட்ட காசா தென்மேற்கில் அமைந்துள்ளது.
காசாவிலிருக்கும் ஷரவ்னாவின் தாய், “அவர் காசாவில் இருப்பது விடயம் அல்ல. அவர் விடுதலை அடைந்ததே பெரிய செய்தி. காசா மக்கள் அவரை நன்றாக பார்த்துக்கொள்வார்கள்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே இஸ்ரேல் சிறையில் இருக்கும் ஜாபர் இஸ்ஸதீன், தாரிக் காதன் ஆகியோர் மூன்று மாதங்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு தம்மீதான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க இஸ்ரேல் இணங்கியதை அடுத்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
மேற்படி இருவரும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் கடந்த நவம்பர் தொடக்கம் இஸ்ரேல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மற்றொரு பலஸ்தீனரான சமர் இஸ்லாவி தற்போது டெல் அவிவுக்கு அருகிலிருக்கும் கப்லான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 8 மாதங்களாக உணவு உட்கொள்ள மருத்து வருகிறார். இஸ்ரேல் வீரர்கள் மீது கற்களை எறிந்தது தொடக்கம் ஆட்கொல்லி தாக்குதலை நடத்தியது வரை பல்வேறு குற்றச்சாட்டுகளில் இஸ்ரேல் சிறையில் சுமார் 4000 பலஸ்தீனர்கள் உள்ளனர். சிறைக்கைதிகளை விடுவிக்கக் கோரி மேற்குக்கரையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் கலவரங்களாக மாறி வருகிறது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/19/?fn=w1303193 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE