கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழகத்தின் அரசியல் ஆசிர்வாதத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பிக்குகள் உட்பட அனைவருக்கும் தமது கவலைகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், சகல அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். சட்டரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் போராட்டங்களை நடத்த வேண்டும். எனினும் இப்படியான சம்பவங்கள் காரணமாக சகல பௌத்த சக்திகளும் கவலையடைந்துள்ளன. பௌத்த மக்கள் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டு வருகின்றனர் என்பதை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து கொள்கிறோம்.
மத சுதந்திரம் குறித்து பேசும் அரசசார்பற்ற நிறுவனங்கள், சில அரசியல் தலைவர்கள் இது குறித்து அமைதி காப்பது கவலைக்குரியது. இவ்வாறான ஆத்திரமூட்டும் சம்பவங்கள் காரணமாக இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் எந்த மோதல்களையும் ஏற்படுத்த எந்த தரப்புக்கும் இடமளிக்கக் கூடாது.
அதிகளவான இந்திய முதலீடுகள், பிரஜைகள் வாழ்ந்து வருவதுடன், இந்திய மாணவர்களும் பல்கலைக்கழங்களில் பயின்று வருகின்றனர். இலங்கையில், இந்திய எதிர்ப்பை ஏற்படுத்த இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகளும், குழுக்களும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3560 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.