......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் ஆயுதப்படை பிரதானி நியமனம்

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிக்கு முன்னாள் ஆயுதப்படை பிரதானியும் வலதுசாரியுமான, மொஷ் யாலொனை பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தேர்வு செய்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மைக்கு முகம் கொடுக்க அவரது அனுபவமும் தேவைப்படுகிறது என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

62 வயதான யாலொன் கடந்த 4 ஆண்டுகளாக நெதன்யாகுவின் லிகுட் கட்சியில் செயற்பட்டு வந்தவராவார். பலஸ்தீன தேசத்தை இல்லாமலாக்கும் மேற்குக் கரை ஆக்கிரமிப்புக்கு ஆதரவான கருத்தை கொண்டுள்ள இவர் ஈரான் அணு செயற்பாட்டு தளங்களுக்கு தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவான கொள்கையை உடையவராவார்.
தவிர காசாவில் ஹமாஸ் அமைப்பின் எழுச்சி, அயல் நாடுகளான எகிப்து மற்றும் சிரியாவில் இஸ்லாமியவாதிகளின் எழுச்சிக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என யாலொன் வலியுறுத்தி வருகிறதார்.
“பிராந்திய நாடுகள் எங்கும் பதற்றம் நிலவிவரும் சூழலில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அனுபவம் வாய்ந்த யாலொன் போன்றவர்கள் பதவியில் இருக்க வேண்டும்” என நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
“எதிர்காலத்தில் கடும் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையில் இஸ்ரேல் இராணுவத்தை வழி நடத்தும் கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளேன்” என யாலொன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார். இதில் அவர் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக உள்ளவை என, ஈரான் அணு செயற்பாடு, அரபு உலகின் பதற்றம், வடக்கு (லெபனான்) மற்றும் காசா பகுதியில் அச்சுறுத்தல் ஆகியவற்றை விபரித்துள்ளார்.
இஸ்ரேலின் புதிய கூட்டு அரசு அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ள நிலையில் புதிய அரசு விரைவில் பொறுப்பேற்கவுள்ளது. இதில் பலஸ்தீன விடயத்தில் கடும் போக்கு கொள்கை கொண்ட லிகுட் கட்சியின் மற்றதொரு உறுப்பினரான டென்னி டெனொன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெனொன் பேஸ்புக்கில் வெளியிட்ட அறிவிப்பில் தாம் தேசியவாத முகாமின் முக்கியத்துவத்தை காப்பாற்றுவதாகவும் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் மேற்குக்கரை இஸ்ரேல் குடியிருப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எஹுட் பராக்கிற்கு பதில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சராக யாலொன் நியமிக்கப்படவுள்ளார். மைய இடதுசாரி கட்சி தலைவரான பராக் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டு வந்தார். எனினும் நடந்து முடிந்த இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பராக் போட்டியிடவில்லை. கடந்த 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இஸ்ரேல் ஆயுதப் படைகளின் பிரதானியாக இருந்த யாலொன் பின்னர் அரசின் திட்டமிடல்கள் தொடர்பான துணை பிரதமராக செயற்பட்டார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/19/?fn=w1303194 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE