......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 16 March 2013

தேசிய பொறிமுறை வேண்டும்:சமரசிங்க

பேரவையின் முன்னிலையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் தேசிய பொறிமுறை ஒன்றை நாம் தற்போது உருவாக்க வேண்டும் என்று இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் நலன்கருதி மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பில் இன்னும் நான்கு ஆண்டுக்குள் முன்னேற்றங்களைக் காட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற 'உலகளாவிய காலக்கிரம மீளாய்வு செயற்குழு அறிக்கை' மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது தேசிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைத் திட்டங்களுடன்  எம்மால் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. 

இன்னும் நான்கு வருடங்களில் மீளாய்வொன்றை நாம் சந்திக்கும் போது இலங்கை மக்களின் மனித உரிமைகள் ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பில் மேலும் முன்னேற்றங்களை எம்மால் காட்டக்கூடியதாக இருக்கும்' என்றும்  தெரிவித்துள்ளார். 

அத்துடன் ,இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களே கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமர்வின் போது சில தலையீடுகளுக்கு ஏதுவான விடயமாக இருந்தது. அது உண்மைத் தன்மை பற்றி ஆராயப்படாமல் வெளியிடப்பட்ட தகவல்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பொது மக்கள் இழப்பு ஏற்பட்டமை தொடர்பான கேள்விகள் மற்றும் சனல் 4 வீடியோ காட்சிகள் பற்றி இராணுவ அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60808-2013-03-16-03-34-55.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE