......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 16 March 2013

இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும்: சீனா

'இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும்' என சீனா சர்வதேச சமூகத்தை கோரியுள்ளது. 

'ஒரு நாட்டில் உள்விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச சமூகம் நிறுத்திகொள்ள வேண்டுமென்றும் பிரச்சினைகளை பாரபட்சமின்றி அனுகவேண்டும்' என்றும் சீனா சர்வதேச சமூகத்தை கோரியுள்ளது.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை தொடர்பான மீளாய்வின்போது பல நாடுகள் தமது பாராட்டுதல்களை இலங்கைக்கு வழங்கியிருந்தன. இதன்போது பல நாடுகள் தமது கருத்துக்களை இலங்கை தொடர்பாக வழங்கியிருந்தது.

'யுத்தம் முடிவடைந்ததிற்கு பின்பு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகளை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ள வேண்டும். இலங்கை சர்வதேச சமூகத்திடம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்த அபிவிருத்தி திட்டங்கள் சாதகமாக அமைந்துள்ளன' என இதன்போது, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.



(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60813-2013-03-16-04-09-23.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE