இலங்கை விவகாரம் தொடர்பாக தி.மு.கவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக இன்று காலை அவர் அறிவித்தார்.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
தி.மு.க தலைவர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவரது அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். லோக்சபாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது.
அதனால் தி.மு.க வெளியேறுவதாக அறிவித்துள்ளதால் மத்திய அரசு கவிழாது, தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61022-2013-03-19-07-33-32.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.