இந்திய தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலி அலைவரிசைகள் குறுக்கீடு செய்வதனால் மன்னார் மக்களால் இலங்கை ஒளி, ஒலிபரப்புக்களை பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் ஆகவும் பிந்திய டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தும்போது இலங்கையில் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகின்றது என தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட தெரிவித்தார்.
இந்த பிரச்சினை யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் கூட ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடையிலான காலப்பகுதியில் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் குழப்பம் ஏற்படுவது வழமையானது எனவும் சுட்டிக்காட்டினார்.
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/60783-2013-03-15-10-08-15.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.