“கடந்த வாரம் நெதன்யாகு ஜோர்தான் சென்று மன்னர் இரண்டாவது அப்துல்லாவை சந்தித்துள்ளார்” என்று மேற்படி ராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த சந்திப்பில் இருவரும் மத்திய கிழக்கு அமைதி செயற்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் இஸ்ரேலிய ஊடகங்கள் அரபு டெய்லி பத்திரிகைக்கு உறுதி செய்துள்ளன. இஸ்ரேல் - பலஸ்தீனத்திற்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை கடந்த 2010 செப்டெம்பர் மாதம் முறிவடைந்தது. இந்நிலையில் இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க ஜோர்தான் கடந்த ஆண்டில் இரு தரப்புக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்த போதும் அவை வெற்றி அளிக்கவில்லை.(மூலம்:http://www.thinakaran.lk/2013/03/04/?fn=w1303047 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.