......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 4 March 2013

சிரியாவில் 2014 இல் ஜனாதிபதி தேர்தல்

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹி குறிப்பிட்டுள்ளார்.

சிரிய வெளியுறவு அமைச்சர் வலித் அல் முவல்லம் ஈரான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடனான சந்திப்புக்கு பின்னரே சலாஹி இந்த தகவலை வெளியிட்டார். “அடுத்த தேர்தலில் ஜனாதிபதியுடன் ஏனையோரும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. சிரிய மக்கள் தாம் விரும்புபவரை தேர்வு செய்ய முடியும்” என சலாஹி கூறினார்.
இதனால் எதிர்வரும் 2014 தேர்தல் வரை அஸாத் தொடர்ந்தும் சிரிய ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்பதே ஈரானின் நிலைப்பாடு என சலாஹி குறிப்பிட்டார். சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாகவே அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமை ஈரானை சென்றடைந்தார்.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/04/?fn=w1303046 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE