......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

கணனியில் கோளாறு; கியூரியாசிட்டி ஆய்வுக்கலத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்

கணனி கோளாறு காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வை மெற்கொண்டுவரும் கியூரியாசிட்டி ஆய்வுக்கலத்தின் செயற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாஸா) செவ்வாய் கிரக ஆய்வுத் திட்ட முகாமையாளர் ரிச்சர்ட்குக் கூறியிருப்பதாவது:- கியூரியா சிட்டி ஆய்வுக்கலத்துடன் தொடர்புடைய கணனியில் பழுது ஏற்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வுக்கலத்தின் செயல்பாடுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைத்துள்ளோம்.

பழுதை நீக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்து ஓரிரு நாட்களில் பழுது சரிசெய்யப்படும்.
அதன் பின்னர் மீண்டும் ஆய்வுக்கலம் வழக்கமான செயல்பாட்டு நிலைக்கு மாற்றப்படும் என்றார்.
விண்வெளிக்குச் செல்லும் விண்கலத்தைப் போலவே கியூரியாசிட்டி இயந்திரத்திலும் ஏ மற்றும் பி என 2 கணனிகள் இருக்கும். இதில் ஏ கணனி பழுதடைந்துள்ளது. பி கணனியின் உதவியுடன் தான் அந்த ஆய்வுக்கலத்தின் செயல்பாடுகள் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

(மூலம்:http://www.thinakaran.lk/2013/03/05/?fn=w1303053 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE