மீண்டும் ஒரு வன்முறை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே நேற்று தேர்தல் இடம்பெற்றது. கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்தலை அடுத்து கென்யாவில் இடம்பெற்ற இனக் கலவரத்தில் 1,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். நேற்று நடைபெற்ற தேர்தல் மூலம் ஜனாதிபதி, சென்ட் உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், ஆளுநர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை வாக்காளர்கள் தெரிவு செய்யவுள்ளனர்.
இதில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய பிரதமர் ரைலா ஒடின்கா மற்றும் துணைப் பிரதமர் உஹுரு கென்யட்டா ஆகியோர் மற்றுமொரு கலவரத்துக்கு வழிவகுக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். கடந்த தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகளால் 600,000க்கும் அதிகமானோர், இடம்பெயர்ந்தனர்.
எனினும் தேர்தலை ஒட்டி கரையோர நகரான மொம்பாசாவில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறைகளில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 பொலிஸாரும் பலியாகியுள்ளனர்.
தேர்தலையொட்டி 39000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/05/?fn=w1303056 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.