......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 11 March 2013

பஷீர் மற்றும் ஹக்கீம் இடையே மோதல் வலுக்கிறது

SLMC Flagகட்சியின் தலைமைத்துவத்திற்கு தெரியாமல் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்ட பஷீர்ஷேகு தாவூத், அவர் கட்சியில் வகிக்கும் தவிசாளர் பதவியை துறந்திருக்க வேண்டும் என நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பஷீர் ஷேகுதாவூத் கட்சிக்குத் தெரியாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவை பெற்றமையானது பிழையான முடிவாகும். அது தொடர்பில் கட்சி கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
அவர் ஏற்கனவே கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரதியமைச்சுப் பதவியை துறந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பஷீர் எடுத்த முடிவானது கட்சியை பாதிக்கக் கூடியதாக இருந்தது. அதன்போது நான் கடுமையான நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் நிதானமாக நடந்துகொள்ளுமாறு தெரிவித்தனர். கட்சி தலைமை என்ற ரீதியில் நான் மென்மையாக நடந்து கொண்டேன் .
தமது கட்சியை பாதிக்கும் வகையில் செயற்படும் போது கட்சியை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் தலைமை என்றால் என்ன என்பதை தேர்தல் காலங்களின் போது தெரிந்துகொள்வார்கள் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.


(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE