கடந்த ஜனவரியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையிலேயே இந்த கெடு விதிக்கப்பட்டுள்ளது.
(மூலம்:http://www.thinakaran.lk/2013/03/04/?fn=w1303042 )
முன்னர் பென்ஜமின் நெதன்யாகு ஜனாதிபதி ஷிமொன் பரிசை சந்தித்த போது புதிய அரசை அமைப்பதற்கு 28 நாள் கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடுவுக்குள் புதிய அரசை அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
ஜனவரியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் வலது சாரி லிகுட் பெய்ட்னு கூட்டணி பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்ற போதும் அரசு அமைப்பதற்கு போதுமான ஆசனங்களை வெல்லவில்லை. இந்நிலையில் கடந்த காலங்களில் அரசு அமைப்பதற்கான நெதன்யாகுவின் ஏனைய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.
இதில் 120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வலதுசாரி கட்சிகள் மற்றும் மைய இடதுசாரி கட்சிகள் தலா 60 ஆசனங்களை வென்றுள்ளன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பென்ஜமின் நெதன்யாகு ஜனாதிபதி ஷிமன் பரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் போது அவருக்கு புதிய அரசு அமைக்க மேலும் இரண்டு வார கெடு வழங்கப்பட்டது. எனினும் கூட்டணி அமைப்பதற்கு ஒரு சில கட்சிகள் ஏனைய கட்சிகளை புறக்கணித்து விடுவதாக ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் நெதன்யாகு குறிப்பிட்டார்.
இதில் பெஷ் அடிட் மற்றும் வலது சாரி ஜுவிஷ் ஹோம் கட்சிகள் பழைமைவாத யூதக் கட்சியுடன் கூட்டு சேர மறுத்து வருகிறது. மேற்படி பழைமைவாத யூதக் கட்சி கட்டாய இராணுவ பயிற்சியில் இருந்து யூத கல்வி ஸ்தாபன மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்தை தொடர்ந்து தக்கவைக்க அழுத்தம் கொடுத்து வருவதற்கு ஏனைய கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் நெதன்யாகுவுக்கு புதிய அரசை அமைப்பதற்கு மார்ச் 16 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளது. இந்த காலப் பிரிவுக்குள் அவரால் அரசமைக்க முடியாமல் போனால். ஜனாதிபதி ஏனைய கட்சி தலைவர்களுக்கு அரசு அமைக்க கோரிக்கை விடுப்பார். அந்த முயற்சியும் தோல்வியடையும் பட்சத்தில் இஸ்ரேல் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டி வரும்.(மூலம்:http://www.thinakaran.lk/2013/03/04/?fn=w1303042 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.