......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 4 March 2013

ஜமஆதே இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை நாடெங்கும் ஆர்ப்பாட்டம்: பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு

பங்களாதேஷில் இஸ்லாமிய கட்சி தலைவருக்கு மரண தண்டனை வழங்கியதை அடுத்து அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் வட பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ள தோடு வன்முறைகளால் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் பங்களாதேஷின் பிரதான இஸ்லாமிய கட்சியான ஜமஆதே இஸ்லாமியின் தலைவருக்கு அந்நாட்டு யுத்த நீதிமன்றத்தால் மரண தண்டனை விநிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் வடபகுதியின் ஷாஜ ஹான்பூர் நகரில் 5000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பொலிஸ் நிலையங்களை தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு இராணுவம் குவிக்கப்பட் டுள்ளது.
அதேபோன்று பொக்ரா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 12 பேர் கொல்லப்பட் டுள்ளனர். ஜமஆதே இஸ்லாமி கட்சியின் நாடு தழுவிய இரண்டு நாள் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்கள் நேற்று ஆரம்பமாயன. இதில் தமது செயற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை நடத்துவதாக ஜமஆதே இஸ்லாமி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதன்படி யுத்த நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமான கடந்த ஜனவரி 21ம் திகதி தொடக்கம் இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
அதிலும் ஜமஆதே இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அறிவித்தது முதல் நான்கு நாட்களுக்குள் மாத்திரம் 56 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 1971ம் ஆண்டு இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரின் போது கொலை, கற்பழிப்பு, மதக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அந்நாட்டு யுத்த நீதிமன்றம் டெல்வார் ஹொஸைன் சய்யிதீக்கு கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்தே நாடு பூராகவும் ஜமஆதே இஸ்லாமிய உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நகரமெங்கும் 10000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ள தோடு தலைநகர் மற்றும் கரையோர நகரான சித்தகொனில் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.



(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/04/?fn=w1303043 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE