கடந்த 2011 ஆம் ஆண்டு தம்மை பதவி விலக்கச் செய்த ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றது மற்றும் ஊழலில் ஈடுபட்டது தொடர்பில் முபாரக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னர் இந்த குற்றச்சாட்டுக்காக முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அதற்கு எதிரான மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் இணங்கியது.
கடந்த 2011 மக்கள் எழுச்சி போராட்டத்தின் போது சுமார் 850 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். 84 வயதான ஹொஸ்னி முபாரக் தற்போது அந்நாட்டு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் முபாரக் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ஹலில் அல் அட்லி மீதான குற்றச்சாட்டையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள விசாரிக்கவுள்ளதாக எகிப்து அரச ஊடகமான மனா குறிப்பிட்டது.(மூலம்:http://www.thinakaran.lk/2013/03/04/?fn=w1303041 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.