......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 4 March 2013

அல்கொய்தா முன்னணி தலைவர் மாலியில் பலி

அல் கொய்தா அமைப்பின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான முக்தார் பெல் முக்தார் மாலியில் சாட் நாட்டு படை வீரர்களால் கொல்லப்பட்டுள்ளார். இந்த செய்தியை சாட் அரச தொலைக்காட்சி வெளியிட்ட போதும் ஏனைய தரப்புகள் இதனை உறுதிப்படுத்தவில்லை.

பெல்முக்தார் கடந்த ஜனவரியில் அல்ஜீரியாவில் 37 பிணைக் கைதிகளை கொன்ற இஸ்லாமிய ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உத்தரவிட்டவராவார்.
மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியா ளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சாட் நாட்டு படையினர் அத்ரர் டி பொகாஸ் மலைப் பகுதியில் இருக்கும் கிளர்ச்சியாளர்களின் தளத்தை தாக்கி அழித்துள்ளனர். இதன் போதே பெல் முக்தார் கொல்லப்பட்டுள்ளார்.
அதேபோன்றும் மாலியில் போராடும் அல் கொய்தா அமைப்பின் மற்றொரு தலைவரான இத்ரிஸ் டபியும் கொல்லப்பட்டுள்ளதாக சாட் அரசு அறிவித்துள்ளது. எனினும் அங்கு படை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பிரான்ஸ் படை இந்த செய்திகளை உறுதி செய்யவில்லை.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/03/04/?fn=w1303044 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE