15 வயது சிறுமியை கடத்திச் சென்று அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகச் கூறப்படும் 22 வயது இளைஞர் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞனை இன்று காலை கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிசார் தெரிவித்தனர். ஆனமடு முதலக்குளி எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் தாய் மரணமடைந்துள்ள நிலையில் சிறுமி தனது பாட்டியிடமே வளர்ந்து வந்துள்ளதுடன் 6 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றபின் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இச்சிறுமிக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர்பு முற்றிய பின்னர் குறித்த இளைஞர் சிறுமியைக் கடத்திச் சென்று அவளுடன் குடும்ப நடத்த ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறு இவர்கள் ஒன்றாக இருப்பதை அவதானித்தவர்கள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபரான இளைஞரும், சிறுமியும் ஆனமடுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை ஆனமடு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60653-2013-03-13-13-41-11.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.