அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மாமியான எலன் விமலா திலகரத்ன(80 வயது) 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் அதிகாரி நிஹால் பிலபிட்டிய கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்தார்.
அவருக்கு, பிலியந்தலையிலுள்ள தனது வீட்டில் வைத்தே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் விமலா திலகரத்ன மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு பாதுகாப்பு வழங்கியுள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரவின் அதிகாரி சாட்சியமளித்துள்ளார்.
இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்து விநியோகத்ததில் ஊழல் மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் ஹய்கோப் வழக்கில் பொன்சேகாவின் மருமகனான தனுக்க திலகரத்ன முதலாவது சந்தேகநபராவார்.
தனுக்க இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை என்றும் அவருடைய மாமி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றதிற்கு தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60659-2013-03-13-14-49-25.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.