......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

வெளிநாட்டவர்களுக்கான 'விபசார விடுதி' முற்றுகை

(மூலம்: )
-எஸ். எம். மும்தாஜ்

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் பெண்களை நடிகைகள் எனக் கூறி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விடுதியும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நாத்தாண்டி வலஹாபிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாசப்பயண ஹோட்டல் ஒன்றிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியை நேற்று திங்கட்கிழமை இரவு  முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்த 3 இளம் பெண்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். 

பாணந்துறை வலானையில் அமைந்துள்ள மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த ஹோட்டலின் முகாமையாளர், பெண் முகாமையாளர் மற்றும் பெண்களை ஹோட்டலுக்கு அழைத்து வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு தங்குவதற்காக அதிகமாக வெளிநாட்டவர்களே வருகை தருவதாகவும்,  சகல வசதிகளுடனும் கூடிய இந்த ஹோட்டலில் அறை ஒன்றுக்கு சுமார் 5000 ரூபாய் அறவிடுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

இங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு நடிகைகள் எனத் தெரிவித்து ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் அழகிய இளம் பெண்கள் விபச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த இராணுவ வீரர் என தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர்  குறித்த ஹோட்டலில் அறை ஒன்றை நேற்று திங்கட்கிழமை பகல் வாடகைக்கு எடுத்துள்ளார். 

பின்னர் தனக்கு மூன்று இளம் பெண்கள் வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளதுடன், அதற்கு தம்மிடம் நடிகைகள் மூவர் உள்ளனர் என ஹோட்டல் முகாமையாளர் அவரிடம் தெரிவித்துள்ளார்.  

பின்னர் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் மூவரை ஹோட்டலுக்கு நேற்றிரவு வரவழைத்து அவர்களுக்காக 30 ஆயிரம் ரூபாய் பணத்தினை குறித்த பொலிஸ் அதிகாரியிடம் ஹோட்டல் முகாiயாளர் பெற்றுக் கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

அதன் பின்னரே இவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மாராவில பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை  இன்று மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மூன்று பெண்களும் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஏனையவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE